Images
  • trump (1)
    (படம்: AFP)

"என்னை மோசமாகச் சாடுகிறார்கள்"-டிரம்ப்

எந்த ஓர் அரசியல் தலைவரும் என்னளவு இவ்வளவு அநியாயமாக நடத்தப்பட்டிருக்கமாட்டார் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியிருக்கிறார்.

திரு டிரம்ப், நீதிக்கு இடையூறாக இருந்ததாய்க் குறைகூறப்படுகிறார்.

முன்னாள் மூத்த ஆலோசகர் ஒருவர் தொடர்பிலான விசாரணையை முடக்குமாறு, மத்தியப் புலனாய்வுப் பிரிவின் முன்னைய இயக்குநர் ஜேம்ஸ் கோமியைத் திரு டிரம்ப் கேட்டுக்கொண்டதாகக் குற்றச்சாட்டு நிலவுகிறது.

மேலும், அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது, ரஷ்யாவுடன் டிரம்ப் தரப்பினர் கூட்டாகச் செயல்பட்டதன் தொடர்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அது தொடர்பான விசாரணையைத் தடுக்கும் நோக்கில், திரு கோமியை அதிபர் டிரம்ப் பணிநீக்கம் செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன.

இதற்கிடையே, திரு டிரம்பை பொறுப்பில் இருந்து அகற்றுவது பற்றி எதிர்த்தரப்பு ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் சிலர் பேசுவதாகத் தகவல் வெளிவந்துள்ளது.


உங்கள் கருத்து

Top