Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

'தாயன்புக்கு ஈடேது?' - நெகிழும் பிரிட்டன் இளவரசர் வில்லியம்

பிரிட்டன் இளவரசர் வில்லியமும், அவரது சகோதரர் ஹாரியும் தங்கள் தாயை இழந்து 20 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், தங்கள் இளம்பருவ நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளவிருக்கின்றனர்.

வாசிப்புநேரம் -
'தாயன்புக்கு ஈடேது?' - நெகிழும் பிரிட்டன் இளவரசர் வில்லியம்

(படம்: Reuters)

பிரிட்டன் இளவரசர் வில்லியமும், அவரது சகோதரர் ஹாரியும் தங்கள் தாய் டயானாவை இழந்து 20 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், தங்கள் இளம்பருவ நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளவிருக்கின்றனர்.

அவர்களது தாயாரான இளவரசி டயானா, தமது 36ஆவது வயதில் 1997ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் கார் விபத்தொன்றில் காலமானார். அப்போது இளவரசர் வில்லியமுக்கு வயது 15, ஹாரிக்கு வயது 12.

"எங்கள் அன்னை டயானா- வாழ்க்கையும், சிறப்பும்" என்ற பெயரில் ஒன்றரை மணிநேர தொலைக்காட்சி ஆவணப்படத்தை பிரிட்டன் இந்த வாரம் ஒளிபரப்பவிருக்கிறது.

அது இளவரசி டயானாவின் வாழ்க்கையை எடுத்துக்கூறும் நிகழ்ச்சியாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டது.

தாயின் பிரிவால் எப்படி வாடினார் என்பதையும், அதிலிருந்து எப்படி மீண்டு வந்தார் என்பதையும்,  இந்த ஆண்டு தொடக்கத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துகொண்டார், இளவரசர் வில்லியம்.

தாயன்புக்கு ஈடில்லை என்று நெகிழ்ந்தார் அவர்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்