Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஸிம்பாப்வேயில் ஆட்சிக் கவிழ்ப்பு

அதிபரைச் சூழ்ந்திருக்கும் குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் சொன்னது.

வாசிப்புநேரம் -
ஸிம்பாப்வேயில் ஆட்சிக் கவிழ்ப்பு

(படம்:AFP)

ஸிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டது ராணுவ ஆட்சிக் கவிழ்ப்புப்போல தெரிவதாக ஆப்பிரிக்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஒன்றியத்தின் தலைவர், ஆட்சியை மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

(படம்:AFP)

எனினும், ஆட்சிக் கவிழ்ப்பை மறுத்துள்ள இராணுவம், திரு முகாபே பாதுகாப்பாய் இருப்பதாக வலியுறுத்தியுள்ளது.

 (படம்:AFP)

திரு முகாபேயின் பதவிக்கு அடுத்து யார் வருவார் என்ற பதற்றத்துக்கு இடையே அண்மை நடவடிக்கை எடுக்கப்பட்டது.

துணை அதிபர் எம்மர்சொன் நான்காக்வாவும் (Emmerson Mnangagwa) கடந்த வாரம் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

(படம்: Reuters)

திரு. முகாபேயின் மனைவி அதிபர் பதவிக்கு வரலாம் எனப் பேசப்பட்டது.

93 வயது திரு முகாபே 1980இலிருந்து நாட்டைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்