பாலிக்குச் சென்றால் 13 வெள்ளி வரி செலுத்தவேண்டும்
வாசிப்புநேரம் -
இந்தோனேசியாவின் சுற்றுப்பயணத் தலமான பாலிக்குச் செல்வோர் 150,000 ரூப்பியா (13 வெள்ளி) வரி செலுத்தவேண்டும்.
விதிமுறை இன்று (14 பிப்ரவரி) நடப்புக்கு வந்துள்ளது.
தீவின் கலாசாரத்தையும் சுற்றுப்புறத்தையும் பாதுகாக்க வரி விதிக்கப்படுவதாக அதிகாரிகள் கூறினர்.
வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் இணையம் வழி வரி செலுத்தவேண்டும்.
இந்தோனேசியர்கள் செலுத்தத் தேவையில்லை.
ஆண்டுதோறும் பாலிக்கு மில்லியன்கணக்கானோர் செல்கின்றனர்.
கடந்த ஆண்டு ஜனவரிக்கும் நவம்பருக்கும் இடைப்பட்ட காலத்தில் மட்டும் சுமார் 4.8 மில்லியன் பேர் தீவுக்குச் சென்றிருந்தனர்.

ஆதாரம் : AFP