Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

ஆசியா

சிங்கப்பூரிலிருந்து மலேசியா சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது - மாணவி மரணம்

வாசிப்புநேரம் -
இன்று சிங்கப்பூரில் இருந்து கோலாலம்பூருக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து விபத்துக்குள்ளானதில் தமிழகத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி யாஃபாரா தாஜ் பக்ருதீன் ஹுசேனி (Yafarah Taj Fakrudin Hussaini) மாண்டார்.

The Star செய்தி நிறுவனம் அதனைத் தெரிவித்தது.

மாணவி யாஃபாரா தாஜ்ஜின் உறவினர்கள் இருவர் விபத்தில் கடுமையாகக் காயமுற்றனர்.

கோலாலம்பூர் நோக்கி நெடுஞ்சாலையில் போய்க்கொண்டிருந்தபோது பேருந்து விபத்தில் சிக்கி, தீமூண்டது.

அதிகாலை 4 மணியளவில் அந்தச் சம்பவம் நடந்தது.

பேருந்தில் மொத்தம் 28 பயணிகள் இருந்தனர்.

காயமுற்றவர்களில் ஒருவர் 69 வயது பீர் முகம்மது கனுதீன் (Peer Mohamed Kannudeen). அவர் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

மற்றொருவர் 45 வயது அனிசா பேகம் பக்ருதீன் ஹுசேனி (Anissa Begum Fakrudin Hussaini). அவர் சென்னையைச் சேர்ந்தவர்.

பேருந்து, மோட்டார் சைக்கிளோடு மோதித் தீப்பற்றியது.

21 வயது மோட்டார் சைக்கிளோட்டி காயமின்றித் தப்பியதாக The Star தெரிவித்தது.
ஆதாரம் : AGENCIES

மேலும் செய்திகள் கட்டுரைகள்