Skip to main content
தைவான் வெடிப்புச் சம்பவம்: மற்றொருவர் பலி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

ஆசியா

தைவான் வெடிப்புச் சம்பவம்: மற்றொருவர் பலி

தைவானின் கேளிக்கைப் பூங்கா வெடிப்பில் காயமடைந்த மற்றொரு நபர் மாண்டுவிட்டார். சம்பவத்தில் மாண்ட 2வது நபர் அவர் என்று தெரிவிக்கப்பட்டது. அவர் 19 வயது இளையர் என்றும், அவருக்குத் 99 விழுக்காட்டுத் தீப்புண் காயங்கள் ஏற்பட்டிருந்தன என்றும் கூறப்பட்டது.

வாசிப்புநேரம் -
தைவான் வெடிப்புச் சம்பவம்: மற்றொருவர் பலி

வெடிப்பு ஏற்பட்ட இடம்

வெளியீடு : 02 Jul 2015 12:05PM புதுப்பிப்பு : 02 Jul 2015 12:14PM

தைப்பெய், தைவான்: தைவானின் கேளிக்கைப் பூங்கா வெடிப்பில் காயமடைந்த மற்றொரு நபர் மாண்டுவிட்டார். சம்பவத்தில் மாண்ட 2வது நபர் அவர் என்று தெரிவிக்கப்பட்டது. அவர் 19 வயது இளையர் என்றும், அவருக்குத் 99 விழுக்காட்டுத் தீப்புண் காயங்கள் ஏற்பட்டிருந்தன என்றும் கூறப்பட்டது. 

சென்ற சனிக்கிழமையன்று தலைநகர் தைப்பெயின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஃபொர்மோஸா ஃபன் கோஸ்ட் (Formosa Fun Coast) கேளிக்கைப் பூங்காவில் நடந்த விழாவில் சுமார் ஆயிரம் பேர் கலந்துகொண்டனர்.  அங்கு தூவப்பட்ட பல வண்ணச் சோளமாவுப் பொடி, திடீரென்று தீப்பிழம்பாக உருவெடுத்தது.  

சம்பவத்தில் 500-க்கும் அதிகமானோருக்கு மோசமான தீக்காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு 43 மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்