வால் ஸ்ட்ரீட் ஜர்னல் சஞ்சிகைக்கு எதிராக வழக்குத் தொடுக்கவிருக்கும் நஜிப்
மலேசியப் பிரதமர் நஜிப் ரஸாக், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் சஞ்சிகைக்கு எதிராக வழக்குத் தொடுப்பார் என்று மலேசிய நாளேடு ஒன்று தெரிவித்துள்ளது. வால் ஸ்ட்ரீட் ஜர்னல் சஞ்சிகையில் நேற்று பிரதமர் நஜிப்பையும் 1MDB முதலீட்டுத் திட்ட நிதி சர்ச்சையையும் தொடர்பு படுத்தி அறிக்கை ஒன்று இடம்பெற்றிருந்தது.
மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்.
கோலாலம்பூர், மலேசியா: மலேசியப் பிரதமர் நஜிப் ரஸாக், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் சஞ்சிகைக்கு எதிராக வழக்குத் தொடுப்பார் என்று மலேசிய நாளேடு ஒன்று தெரிவித்துள்ளது. வால் ஸ்ட்ரீட் ஜர்னல் சஞ்சிகையில் நேற்று பிரதமர் நஜிப்பையும் 1MDB முதலீட்டுத் திட்ட நிதி சர்ச்சையையும் தொடர்பு படுத்தி அறிக்கை ஒன்று இடம்பெற்றிருந்தது. திரு நஜிபுக்குச் சொந்தமானது என்று நம்பப்படும் வங்கிக் கணக்கில் அந்தத் திட்டத்தின் நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர் பணம் போடப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது.
நேற்று திரு நஜிப் அதற்கு மறுப்புத் தெரிவித்திருந்தார். திரு மாஹாத்திரின் சொந்த தேவைகளுக்கான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதைத் தொடர்ந்து அந்தக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருப்பதாகச் சொன்னார் திரு நஜீப். இந்நிலையில் அந்த சஞ்சிகையின் அறிக்கையை ஆராயவிருப்பதாகக் கூறியுள்ளது மலேசியாவின் ஊழல் எதிர்ப்புப் பிரிவு.