MERS நோய் - ஹாங்காங், தைவானில் பயண எச்சரிக்கை
தென் கொரியாவுக்குத், தேவை இருந்தால் மட்டுமே பயணம் மேற்கொள்ளுமாறு, ஹாங்காங்கில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென் கொரியாவில் அதிகரித்திருக்கும் கடுமையான MERS மூச்சுத் திணறல் நோய்ச் சம்பவங்களைத் தொடர்ந்து, ஹாங்காங்கில் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
ஹாங்காங் அனைத்துலக விமான நிலையத்தில் பயணிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறது.
தென் கொரியாவுக்குத், தேவை இருந்தால் மட்டுமே பயணம் மேற்கொள்ளுமாறு, ஹாங்காங்கில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென் கொரியாவில் அதிகரித்திருக்கும் கடுமையான MERS மூச்சுத் திணறல் நோய்ச் சம்பவங்களைத் தொடர்ந்து, ஹாங்காங்கில் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
ஹாங்காங்கில் தற்போது, தென் கொரிய பயணங்களுக்கான எச்சரிக்கை நிலை, சிவப்பில் இருக்கிறது. அதுவே வெளிநாட்டுப் பயணங்களுக்கான 2வது ஆக உயர்வான எச்சரிக்கை நிலை. தென் கொரியாவில் MERS நோய் பரவும் நிலை, கணிசமான அபாயத்தை ஏற்படுத்துவதாக ஹாங்காங் அரசாங்கம் கூறுகிறது. அதன் காரணமாக, மக்கள் தங்கள் பயண ஏற்பாடுகளை மாற்றி அமைக்கவேண்டும் என்றும், முக்கியமற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் அது சொன்னது.
இதற்கிடையே, தைவானில் இருந்து தென் கொரியா செல்பவர்களுக்கும், பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர், தலைநகர் சோலுக்குச் செல்வதற்கு மட்டுமே, தைவானில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இப்போது அது தென் கொரியா முழுவதுக்குமான பயண எச்சரிக்கையாக விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது.
தென் கொரியாவில், நேற்றைய நிலவரப்படி, அந்நோயால் மேலும் 8 பேர் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதனைத் தொடர்ந்து, 95-க்கு உயர்ந்துள்ளது. அங்கு அந்நோய்க்கு, 7 பேர் பலியாயினர். மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர், தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.