Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

கினபாலு மலையில் நில அதிர்வுகளைக் கண்டறியும் இயந்திரம்

மலேசியாவின் கினபாலு மலையில், நில அதிர்வுகளைக் கண்டறியும் அதிநவீன இயந்திரம் பொருத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் அங்கு ஏற்படக்கூடிய நிலநடுக்கங்களில் யாரும் சிக்கிக்கொள்வதை அது தடுக்கும் வகையில் அமையும். 

வாசிப்புநேரம் -
கினபாலு மலையில் நில அதிர்வுகளைக் கண்டறியும் இயந்திரம்

சபாவிலுள்ள கினபாலு மலை

மலேசியாவின் கினபாலு மலையில், நில அதிர்வுகளைக் கண்டறியும் அதிநவீன இயந்திரம் பொருத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் அங்கு ஏற்படக்கூடிய நிலநடுக்கங்களில் யாரும் சிக்கிக்கொள்வதை அது தடுக்கும் வகையில் அமையும். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சபா மாநிலத்துக்குச் சென்றபோது, மலேசிய பிரதமர் நஜிப் ரஸாக் அதனைத் தெரிவித்தார். 

நிலநடுக்கங்கள் எப்போது ஏற்பாடும் என்பதைக் கண்டறியக்கூடிய எவ்வித இயந்திரமும் உலகில் இல்லை என்றார் அவர். இருப்பினும், நில அதிர்வுகளைக் கண்காணிக்கும் இயந்திரங்களைக் கொண்டு, பாதிக்கப்படக்கூடிய இடங்களில் இருந்து, மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ளலாம் என்று பிரதமர் நஜிப் கூறினார். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சபா மாநிலத்தின் மறு சீரமைப்புக்கும், மறுவாழ்வு முயற்சிக்கும், 2.7 மில்லியன் டாலர் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்