ஃபிலிப்பின்ஸை நெருங்கும் சூறாவளி
Noul சூறாவளி, ஃபிலிப்பின்ஸின் லுசோன் தீவை எந்நேரமும் தாக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னுரைக்கப்பட்டதை விட அந்தச் சூறாவளி மேலும் வலிமையானதாக இருக்கலாம் என்று, அந்நாட்டுச் சூறாவளி எச்சரிக்கை நிலையம் கூறியது.
பாதுகாப்புக் காரணங்களால் வெளியேற்றப்பட்டவர்கள்
Noul சூறாவளி, ஃபிலிப்பின்ஸின் லுசோன் தீவை எந்நேரமும் தாக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னுரைக்கப்பட்டதை விட அந்தச் சூறாவளி மேலும் வலிமையானதாக இருக்கலாம் என்று, அந்நாட்டுச் சூறாவளி எச்சரிக்கை நிலையம் கூறியது. தற்போது அந்தப் பகுதியில், மழை பெய்வதாகவும், காற்று வீசுவதாகவும் ஊடகங்கள் தகவல் அளித்துள்ளன. மேலும் கடும் மழை அந்தப் பகுதியில் பெய்யலாம் என்றும், அதன் காரணமாகத் திடீர் வெள்ளம் ஏற்படலாம் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
பாதுகாப்பு நடவடிக்கையாகத், தாழ்வான பகுதிகளிலும், மலைப் பகுதிகளிலும் வசிப்போரில் நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். சூறாவளி தாக்கியதும் பாதிக்கப்பட்டோருக்கு, நிவாரணப் பொருட்களை அனுப்பி வைக்க, ராணுவத் தொண்டூழியர்கள் தயார்செய்து வருகின்றனர்.