நஜிப்பின் மனைவியின் வங்கிக் கணக்குப் பரிமாற்றங்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றன
மலேசியப் பிரதமர் நஜிப் ரசாகின் மனைவியின் வங்கிக் கணக்குப் பரிமாற்றங்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. திருமதி ரோஸ்மா மன்சூரின் (Rosmah Mansor) வங்கிக் கணக்கில் அரை மில்லியன் டாலர் போடப்பட்டுள்ளது என்ற ஊடகங்களின் அறிக்கைகளைத் தொடர்ந்து அந்த விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
மலேசியப் பிரதமர் நஜிப் ரசாகுடன் அவரது மனைவி ரோஸ்மா மன்சூர்.
கோலாலம்பூர், மலேசியா: மலேசியப் பிரதமர் நஜிப் ரசாகின் மனைவியின் வங்கிக் கணக்குப் பரிமாற்றங்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. திருமதி ரோஸ்மா மன்சூரின் (Rosmah Mansor) வங்கிக் கணக்கில் அரை மில்லியன் டாலர் போடப்பட்டுள்ளது என்ற ஊடகங்களின் அறிக்கைகளைத் தொடர்ந்து அந்த விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
Sarawak Report எனும் இணையத்தளம் இவ்வாண்டுத் தொடக்கத்தில் அந்தப் பணம் அவரது கணக்கில் போடப்பட்டதாகத் தெரிவித்திருந்தது. அந்தக் குற்றச்சாட்டுகளை அவரின் வழக்குரைஞர்கள் நிராகரித்துள்ளனர். நாட்டின் முதலீட்டு நிதிஅமைப்பான 1MDB-யில் இருந்து தவறான வழிகளில் நிதி கையாளப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
1MDB-யில் இருந்து 700 மில்லியன் டாலர் திரு. நஜீப்பின் வங்கிக் கணக்கிற்குச் சென்றுள்ளது என்று சென்ற வாரம் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் குற்றஞ்சாட்டியிருந்தது.