பாலியில் மீண்டும் திறந்துள்ள விமான நிலையம்
இந்தோனேசியாவின் பாலியில் உள்ள Ngurah Rai அனைத்துலக விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அதன் விமானச் சேவைகளில் எத்தனை, எப்போது தொடங்கும் என்று தெரியவில்லை என்று கூறப்படுகிறது.
பாலியிலுள்ள Ngurah Rai விமான நிலையம்.
ஜகார்த்தா, இந்தோனேசியா: இந்தோனேசியாவின் பாலியில் உள்ள Ngurah Rai அனைத்துலக விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அதன் விமானச் சேவைகளில் எத்தனை, எப்போது தொடங்கும் என்று தெரியவில்லை என்று கூறப்படுகிறது. எரிமலை வெடிப்பால் கிளம்பும் சாம்பலைத் தொடர்ந்து அந்த விமான நிலையமும் வேறு 4 விமான நிலையங்களும் மூடப்பட்டன.
இன்று காலை மூடப்பட்டிருக்கும் அந்த 3 விமான நிலையங்களும் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும் Ngurah Rai அனைத்துலக விமான நிலையத்தில் சூழ்நிலை சாதகமாய் இருந்ததால் அதைத் திறப்பதற்கு அனுமதி வழக்கப்பட்டது என்று அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். மவுண்ட் ரவுங் எரிமலைக்கு அருகில் உள்ள ஜாவா தீவின் 2 உள்ளூர் முனையங்கள் மூடப்பட்டிருக்கும் என்று அதிகாரிகள் கூறினர்.