ஆப்கானிஸ்தானில் திடீர் வெள்ளம் - 12 பேர் மரணம்; 40 பேரைக் காணவில்லை
வாசிப்புநேரம் -
(படம்: unsplash)
ஆப்கானிஸ்தானின் மத்தியப் பகுதியில் தொடர் மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 12 பேர் மாண்டனர்.
கிட்டத்தட்ட 40 பேரைக் காணவில்லை என அரசாங்கப் பேச்சாளர் ஸபிஹுல்லா முஜாஹிட் (Zabihullah Mujahid) AFP செய்தியிடம் தெரிவித்தார்.
வர்டாக் (Wardak) மாநிலத்திலுள்ள ஜல்ரேஸ் (Jalrez) மாவட்டத்தில் அந்தப் பேரிடர் நிகழ்ந்துள்ளது. சம்பவ இடத்துக்கு அவசர உதவிகள் அனுப்பப்படுவதாகத் திரு முஜாஹிட் சொன்னார்.
உயிர்ச்சேதத்துடன் பொருட்சேதங்களும் ஏற்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
ஆப்கானிஸ்தானில் மழைக்காலத்தில் திடீர் வெள்ளம் ஏற்படுவது வழக்கம்.