1MDB: "கடன்களை 4 - 6 மாதத்திறற்குள் அடைக்கமுடியும்"
மலேசியாவின் அரசாங்க முதலீட்டு நிறுவனமான 1MDB, அதன் கடன்களை, நான்கிலிருந்து ஆறு மாதத்திற்குள் அடைக்கமுடியும் என்று அதன் தலைவரும், குழும நிர்வாக இயக்குநருமான திரு. அருள் கந்தா (Arul Kanda) கூறியிருக்கிறார்.
(படம்: REUTERS)
கோலாலம்பூர், மலேசியா: மலேசியாவின் அரசாங்க முதலீட்டு நிறுவனமான 1MDB, அதன் கடன்களை, நான்கிலிருந்து ஆறு மாதத்திற்குள் அடைக்கமுடியும் என்று அதன் தலைவரும், குழும நிர்வாக இயக்குநருமான திரு. அருள் கந்தா (Arul Kanda) கூறியிருக்கிறார்.
Tun Razak பரிவர்த்தனை, Bandar Malaysia திட்டம், Edra Global Energy நிறுவனம் முதலியவற்றில் உள்ள சில சொத்துக்களின் விற்பனை மூலம், அது சாத்தியமாகலாம் என்றார் அவர். 1MDB-இன் சொத்துகள் குறித்து, முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் இருப்பதாகத் திரு. அருள் கந்தா கூறினார். அவற்றுக்கு வலுவான அடித்தளம் இருப்பதே அதற்குக் காரணம் என்றார் அவர்.