Skip to main content
1MDB: சிறப்புப் பணிக் குழுவினர் விசாரிக்கப்படுவர்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

ஆசியா

1MDB: சிறப்புப் பணிக் குழுவினர் விசாரிக்கப்படுவர்

மலேசியாவின் 1MDB  திட்டம் குறித்த சர்ச்சையின் விசாரணையை மேற்கொள்ளும் சிறப்புப் பணிக் குழுவினர் அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்தவிருப்பதாக அந்நாட்டுப் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

வாசிப்புநேரம் -

கோலாலம்பூர், மலேசியா: மலேசியாவின் 1MDB  திட்டம் குறித்த சர்ச்சையின் விசாரணையை மேற்கொள்ளும் சிறப்புப் பணிக் குழுவினர் அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்தவிருப்பதாக அந்நாட்டுப் போலீஸார் தெரிவித்துள்ளனர். ரகசியமான ஆவணங்களை வெளிநாட்டவர்களிடம் ஒப்படைத்ததாகச் சந்தேகிக்கப்படுவோரை அடையாளம் காணும் முயற்சியாக அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

தலைமைப் போலீஸ் அதிகாரி இன்ஸ்பெக்டர் ஜெனரல் காலிட் அபு பக்கார், பாதுகாப்பான தகவல்களை வெளியிடுவதால் நாட்டின் பாதுகாப்புக்குக் கடுமையான பாதிப்புகள் ஏற்படலாம் என்றார். பிரதமரை ஆட்சியிலிருந்து கவிழ்க்கும் முயற்சியாகவும் மலேசியாவின் ஜனநாயக முறையைத் தகர்க்கும் நடவடிக்கையாகவும் அந்தச் சதித்திட்டம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்ற சாத்தியம் குறித்தும் போலீஸார் ஆராய்ந்துவருவதாகக் கூறுகின்றனர்.

மேலும் செய்திகள் கட்டுரைகள்