Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஹாங்காங்கில் கிருமித்தொற்று காரணமாக 2,000 வெள்ளெலிகள் (hamsters) கொல்லப்படும் - செல்லப்பிராணிகள் குறித்து அச்சம்

வாசிப்புநேரம் -

ஹாங்காங்கில் கிருமித்தொற்று காரணமாக 2,000 வெள்ளெலிகளைக் (hamsters) கொல்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

விலங்குகளிடமிருந்து கிருமி பரவும் என்ற கூற்றுக்கு தற்போது ஆதாரம் ஏதுமில்லை.

இருப்பினும் கூடுதலான செல்லப்பிராணிகள் கைவிடப்படும் என்று விலங்கு ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர்.

அண்மையில் செல்லப்பிராணிகளை விற்பனை செய்யும்  கடையின் ஊழியருக்குக் கிருமித்தொற்று உறுதியானது.

அதிகாரிகள் முன்னெச்சரிக்கையாக விலங்குகளிடமிருந்து நூற்றுக்கணக்கான மாதிரிகளை ஆராய்ந்தனர்.

கடையில் இருந்த 11  வெள்ளெலிகளைத் தவிர அனைத்து செல்லப்பிராணிகளுக்கும் கிருமித்தொற்று இல்லை என்று தெரியவந்தது.

அதை அடுத்து, செல்லப்பிராணிகளை விற்கும் 34 கடைகளில் உள்ள 2,000 வெள்ளெலிகளைக்  கொல்லும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், செல்லப்பிராணிகளிடமிருந்து கிருமித்தொற்று பரவிவிடும் என்று உரிமையாளர்கள் சிலர் அச்சம் கொண்டுள்ளதாக உள்ளூர் விலங்கு வதைத் தடுப்புச் சங்கம் கூறியுள்ளது.

அதன் தொடர்பில் கடந்த சில நாள்களாகப் பல அழைப்புகளைப் பெற்றுள்ளதாக அது சொன்னது.

பீதிடையவேண்டாம் என்றும் பயத்தில் செல்லப்பிராணிகளைக் கைவிடவேண்டாம் என்றும் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

- Reuters/aj
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்