1MDB: மேலும் 5 பேருக்கு மலேசியாவை விட்டு வெளியேறத் தடை
மலேசியாவை விட்டு வெளியேறத் தங்களுக்குக் குடிநுழைவு அதிகாரிகள் தடை விதித்திருப்பதாக மேலும் குறைந்தது 5 பேர் கூறியுள்ளனர்.
எதிர்த்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா.
கோலாலம்பூர், மலேசியா: மலேசியாவை விட்டு வெளியேறத் தங்களுக்குக் குடிநுழைவு அதிகாரிகள் தடை விதித்திருப்பதாக மேலும் குறைந்தது 5 பேர் கூறியுள்ளனர். எதிர்த்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா நாட்டைவிட்டு வெளியேறுவதற்குத் தடை விதிக்கப்பட்ட மறுநாள் அந்தச் செய்தி வெளியானது.
தடை விதிக்கப்பட்டோரில் நால்வர் முக்கியப் புள்ளிகள் என்று கூறப்பட்டது. 1MDB முதலீட்டுத் திட்டம் குறித்துக் குறைகூறிவந்த காரணத்தால் விமானத்தில் ஏறத் தாம் அனுமதிக்கப்படவில்லை என்று நம்புவதாகச் சொன்னார் திரு புவா. ஊழல், நிதி நிர்வாக முறைகேடு ஆகியவற்றுக்காக 1MDB திட்டத்தின் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.