1MDB: UMNO கட்சியின் உச்ச மன்றம் சந்திக்கத் திட்டம்
மலேசியாவின் UMNO கட்சியின் உச்ச மன்றம், வரும் வெள்ளிக்கிழமை சந்திக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது. அதில், 1MDB சர்ச்சை குறித்து முக்கியமாகப் பேசப்படும் என்று கூறப்படுகிறது.
1MDB விளம்பரப் பலகை
கோலாலம்பூர், மலேசியா: மலேசியாவின் UMNO கட்சியின் உச்ச மன்றம், வரும் வெள்ளிக்கிழமை சந்திக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது. அதில், 1MDB சர்ச்சை குறித்து முக்கியமாகப் பேசப்படும் என்று கூறப்படுகிறது. அந்தச் சந்திப்புக்கு முன்பாகப், பிரதமர் நஜிப் ரசாக், கட்சி உறுப்பினர்களிடம் பேசவிருப்பதாக, Malaysia Insider நாளிதழ் குறிப்பிட்டது.
மலேசியாவின் ஆளும் கூட்டணின், ஆகப் பெரிய கட்சியான UMNO கட்சியின் தலைவர், திரு நஜிப். 1MDB சர்ச்சை குறித்து, துணைப் பிரதமர் முஹிதின் யாசீன் நேற்று குறைகூறியதாக, UMNO வெளியிட்ட அறிக்கை ஒன்று குறிப்பிட்டது. அந்தச் சர்ச்சை குறித்த அக்கறை, கட்சி உறுப்பினர்களிடையே எழுவது தொடர்பான அறிகுறிகள் தென்படுகின்றன.
கட்சி அரசியல்வாதிகளும் ஆதரவாளர்களும் திரு முஹிதினின் கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்தச் சர்ச்சை தொடர்பான விசாரணை முடியும் வரை, திரு முஹிதின் காத்திருந்திருக்கலாம் என்று அவர்கள் கூறினார். திரு முஹிதின் மட்டுமே, அந்தச் சர்ச்சை குறித்து நெருக்குதல் அளித்து வரவில்லை. அந்த விவகாரத்தைக் கையாள்வதற்கான செயல்திட்டம் ஒன்றை, சமூக ஆர்வலர்க் குழு ஒன்று அறிமுகம் செய்யவிருக்கிறது.