Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

ஆசியா

மலேசியப் பிரதமர் 5 அமைச்சர்களைப் பணிநீக்கம் செய்யவிருப்பதாகத் தகவல்

மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக், அமைச்சரவை மாற்றங்களின் ஒரு பகுதியாக 5 அமைச்சர்களைப் பணிநீக்கம் செய்யவிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. The Malaysian Insider செய்தி இணையவாசல் வெளியிட்ட அறிக்கையும் அதனைத் தெரிவித்தது. 

வாசிப்புநேரம் -
மலேசியப் பிரதமர் 5 அமைச்சர்களைப் பணிநீக்கம் செய்யவிருப்பதாகத் தகவல்

கோப்புப் படம். மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக், துணைப் பிரதமர் முஹிதின் யாசீன்

கோலாலம்பூர், மலேசியா: மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக், அமைச்சரவை மாற்றங்களின் ஒரு பகுதியாக 5 அமைச்சர்களைப் பணிநீக்கம் செய்யவிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. The Malaysian Insider செய்தி இணையவாசல் வெளியிட்ட அறிக்கையும் அதனைத் தெரிவித்தது. பதவியிலிருந்து அகற்றப்பட்டவிருப்போரில், துணைப் பிரதமர் முஹிதின் யாசீனும் ஒருவர் எனக் கூறப்படுகிறது.

மலேசியாவின் அரசாங்க முதலீட்டு அமைப்பான 1MDB பற்றி, கருத்துத் தெரிவிக்கவேண்டாம் என்று பிரதமர் நஜிப், திரு. முஹிதினைக் கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து, அண்மை மாற்றங்கள் இடம்பெறலாம் என்று தெரிகிறது. பிரதமர் நஜிப், அமைச்சரவையில் முக்கிய அமைச்சர்கள் சிலரை விரைவில் மாற்றவிருப்பதாக, மற்றொரு செய்தி இணையவாசலான Utusan Malaysia Online-உம் தகவல் அளித்தது. 

1MDB முதலீட்டு அமைப்புக்கு, 11 பில்லியன் டாலருக்கும் மேற்பட்ட கடன் இருக்கிறது. முறையற்ற நிதி நிர்வாகம், ஊழல் போன்றவற்றின் தொடர்பில் அதன் மீது அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த அமைப்பின் ஆலோசனைக் குழுவிற்குப், பிரதமர் நஜிப் தலைமை வகிக்கிறார்.

மேலும் செய்திகள் கட்டுரைகள்