Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

"கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவேன்" - மலேசியாவில் பொதுவிடுமுறை அறிவித்தார் புதிய பிரதமர்

வாசிப்புநேரம் -
"கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவேன்" - மலேசியாவில் பொதுவிடுமுறை அறிவித்தார் புதிய பிரதமர்

(படம்: Vincent Thian / POOL / AFP)

மலேசியாவில் புதிதாய்ப் பொறுப்பேற்ற பிரதமர் அன்வார் இப்ராஹிம் வரும் திங்கட்கிழமையை (நவம்பர் 28) பொது விடுமுறை நாளாக அறிவித்திருக்கிறார்.

அது குறித்து The Star செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது.

அந்தப் பொதுவிடுமுறை இந்த வாரமே அறிவிக்கப்படவேண்டியிருந்தது என்றும் பிரதமரின் நியமனம் இப்போதுதான் நிறைவடைந்தது என்றும் அவர் சுட்டினார்.

அவர் முன்பு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும்வண்ணம் அடுத்த வாரத் திங்கட்கிழமையை விடுமுறை நாளாக அறிவித்திருப்பதாய்ச் செய்தியாளர் கூட்டத்தில் விளக்கம் அளித்தார்.

ஏன் இன்று (25 நவம்பர்) பொதுவிடுமுறை அனுசரிக்கப்படவில்லை?

பிரதமராக நாட்டின் பொருளியல் மீட்சியில் முதலில் கவனம் செலுத்தவிருப்பதாகத் திரு அன்வார் கூறினார்.

பிரதமர் நியமனத்துக்குப் பின் பங்குச் சந்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் மலேசிய நாணயத்தின் மதிப்பு மேம்பட்டுள்ளது என்றும் அவர் சொன்னதாக The Star தெரிவித்தது.

எனவே, பொதுவிடுமுறையை இன்று இல்லாமல் திங்கட்கிழமை செயல்படுத்த முடிவெடுத்ததாகத் திரு அன்வார் தெரிவித்தார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்