Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஒரே நேரத்தில் 4 பிள்ளைகளுக்குத் திருமணம்... பேரானந்தத்தில் பெற்றோர்!

வாசிப்புநேரம் -

பொதுவாக 4 பிள்ளைகள் என்றால் 4 திருமணங்கள்... 

பிள்ளைகள் ஒவ்வொருவரும்  திருமணம் புரிந்தால்தான்  கடமைகள் முடிந்ததுபோல் இருக்கும் பெற்றோர் பலருக்கு!

மலேசியாவில் ஜொகூர் மாநிலத்தின் தொங்காங் பெச்சா (Tongkang Pechah) வட்டாரத்தைச் சேர்ந்த பெற்றோருக்கு அத்தகைய கடமைகள் ஒரே நேரத்தில் முடிவுக்கு வந்தன...

மஸ்லான் முஸ்கோன் (Mazlan Muskon), மிஸ்னா சுலைமான் (Misnah Sulaiman) ஆகியோரின் 4 பிள்ளைகளும் ஒரே நேரத்தில் திருமணம் புரிந்துகொண்டனர்.

அது குறித்து Bernama செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது.

21 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்ட 4 உடன்பிறப்புகள் நேற்று முன்தினம் (23 ஜனவரி) கூட்டுத் திருமணத்தை நடத்தினர்.

அதன் மூலம் அவர்கள் 40,000 ரிங்கிட்டைச் சேமிக்கமுடிந்ததாக மஸ்லான் Bernama-விடம் சொன்னார்.

கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து திருமணத்திற்குத் திட்டமிட்ட பிள்ளைகள் தகுந்த தேதியையும் ஆடைகளின் கருப்பொருளையும் தேர்ந்தெடுப்பதில் சிரமத்தை எதிர்நோக்கினர்.

அவர்கள் எப்படியோ சீனப் புத்தாண்டு விடுமுறையையொட்டி திருமணத்தை நடத்த முடிவெடுத்ததாக உடன்பிறப்புகளில் மூத்தவரான முகமது அமிருதீன் மஸ்லான் (Muhammad Amiruddin Mazlan) சொன்னார்.

கூட்டுத் திருமணத்தை நடத்தியது எளிதாக இருக்கவில்லை...

உடன்பிறப்புகள் நால்வர்...அவர்களின் வாழ்க்கைத்துணைகள்...குடும்பத்தார் ஆகியோரும் சம்பந்தப்பட்டிருந்தனர்.

திருமணத்தைச் சாத்தியமாக்க அனைவரின் ஒத்துழைப்பும் அவசியமாய் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆதாரம் : Bernama

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்