Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

5 கிலோ எடை கொண்ட puffer மீனுக்கு $30,000 பரிசு

வாசிப்புநேரம் -
மலேசியாவின் திரங்கானு மாநிலத்தைச் சேர்ந்த ஆடவர் 5.2 கிலோ எடையுடைய puffer வகை மீனைப் பிடித்து 105,000 ரிங்கிட் (சுமார் $30,000) பரிசுப் பணத்தைத் தட்டிச் சென்றிருக்கிறார்.

செப்டம்பர் 16 மலேசிய தினக் கொண்டாட்டத்தையொட்டி நடத்தப்பட்ட மீன் பிடிக்கும் போட்டியில் ஸாரி மாமாட் (Zahri Mamat) கலந்துகொண்டார். 2,000க்கும் அதிகமான பங்கேற்பாளர்களில் அவரும் ஒருவர்.

கொடுக்கப்பட்ட நேரத்தில் ஆக அதிக எடையுடைய மீனைப் பிடிக்கவேண்டும்.

3.6 கிலோ எடையுடைய "puffer" மீனைப் பிடித்தவர் 2ஆம் இடத்தில் வந்து, 10,000 ரிங்கிட் (சுமார் $3,000) பரிசுப் பணத்தைப் பெற்றார்.

வெற்றிபெற்ற மாமாட் தமது அனுபவத்தைப் பகிர்ந்தார்......

"puffer மீனுக்குப் பொதுவாக மதிப்பில்லை. அதனைச் சாப்பிட முடியாது என்பதால் யாரும் வாங்கமாட்டார்கள். எனவே, இதற்குமுன் அந்த வகை மீன் வலையில் சிக்கினால் அதனை மீண்டும் நீரில் விட்டுவிடுவேன். ஆனால் போட்டியில் "puffer" மீனைப் பிடித்து பரிசு வென்றது மகிழ்ச்சி" என்றார்.
மாமாட் ஏற்கெனவே 2010ஆம் ஆண்டு மீன்பிடிக்கும் போட்டியில் 22,000 ரிங்கிட் ($6,400) ரொக்கம் வென்றுள்ளார்.

13 ஆண்டுகள் கழித்து மீண்டும் வெற்றிபெற்றதில் ஆனந்தத்தில் இருக்கும் அவர், குடும்பச் செலவுக்கும் ஓய்வு காலத்துக்கும் பரிசுப் பணத்தைப் பயன்படுத்தப் போவதாகச் சொன்னார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்