Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஆப்கான் நிலநடுக்கம் - அவசர உதவி கேட்டு தலிபான் அரசாங்கம் வேண்டுகோள்

வாசிப்புநேரம் -

ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கம் அனைத்துலக நாடுகளிடம் அவசர உதவி கேட்டு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அந்நாட்டில் 20 ஆண்டு காணாத மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

மீட்பு நடவடிக்கை தீவிரமடைந்துள்ள நிலையில் இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை உயிருடன் மீட்கும் முயற்சியில் காலங்கடந்து கொண்டிருக்கலாம் என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர். 

கரடுமுரடான மலை வட்டாரங்களில் ஹெலிகாப்டர்களைக்கொண்டு மட்டுமே மக்களை மீட்கமுடியும். 

ஓராண்டுக்கு முன்பு பதவியேற்ற தலிபான் அரசாங்கத்தின்மீது தடைகள் விதிப்பட்டுள்ளன. எனவே பெரும்பாலான அனைத்துலக உதவி அமைப்புகளோடு அதற்குத் தொடர்பில்லை. 

மரண எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

1,500 பேருக்குமேல் காயமடைந்திருக்கின்றனர். 

காயமுற்றவர்களில் பலர் சிறுவர்கள் என்று கூறப்படுகிறது. 

சுமார் 2,000 வீடுகள் இடிந்துள்ளன. 

இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களின் எண்ணிக்கை தெரியவில்லை. 

குறைந்தது 200,000 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகச் செஞ்சிலுவைச் சங்கம் மதிப்பிடுகிறது.

-Agencies

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்