Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியா: அம்னோ தலைவர் அகமது ஸாஹித் விசா லஞ்ச வழக்கில் குற்றமற்றவர் - உயர் நீதிமன்றத் தீர்ப்பு

வாசிப்புநேரம் -
மலேசியா: அம்னோ தலைவர் அகமது ஸாஹித் விசா லஞ்ச வழக்கில் குற்றமற்றவர் - உயர் நீதிமன்றத் தீர்ப்பு

அகமது ஸாஹிட் ஹமிதி(Ahmad Zahid Hamidi).

மலேசியாவில் ஆளும் அம்னோ கட்சியின் தலைவர் அகமது ஸாஹித் ஹமிடி (Ahmad Zahid Hamidi) வெளிநாட்டு விசா அனுமதி முறையில் லஞ்சம் பெற்றதாகக் கொண்டுவரப்பட்ட வழக்கில் குற்றமற்றவர் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. 

சற்றுமுன் தீர்ப்பை வெளியிட்ட கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி முகமது யாஸித் முஸ்தஃபா (Mohd Yazid Mustafa) அவருக்கு எதிராக அரசாங்கத் தரப்பு வலுவான வழக்கை முன்வைக்கத் தவறிவிட்டதாகக் கூறினார். 

வழக்கு கடந்த ஆண்டு மே மாதம் இருபத்து நாலாம் தேதி தொடங்கியது. மொத்தம் பதினெட்டு சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 

அம்னோ கட்சியின் தலைவர் அகமது ஸாஹித் மீது முப்பத்து மூன்று குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டன.

அவர் Ultra Kirana நிறுவனத்திடம் 42 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டார். 

சீனாவுக்கான ஒரே இடத்தில் சேவை வழங்கும் குத்தகை, உள்துறை அமைச்சுக்கான வெளிநாட்டு விசா அனுமதிமுறை ஆகியவற்றை நீட்டிப்பதற்காக அந்த நிறுவனத்திடம் இருந்து அவர் லஞ்சம் வாங்கியதாகக் குற்றச்சாட்டுகள் கூறின.

உள்துறை அமைச்சராக இருந்தபோது 69 வயது திரு. அகமது ஸாஹித் லஞ்சம் பெற்றதாகக் குற்றச்சாட்டுகள் கூறின. 

மலேசியாவில் விரைவில் பொதுத் தேர்தல் நடைபெறக் கூடும் என்ற செய்திக்கு நடுவே அம்னோ தலைவர் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa