Skip to main content
எல்லைப்பகுதியில் 'அந்நியப் பொருள்கள்'
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

ஆசியா

எல்லைப்பகுதியில் 'அந்நியப் பொருள்கள்' - அதுவே கிருமிப்பரவலுக்குக் காரணம்! வடகொரியா

வாசிப்புநேரம் -
எல்லைப்பகுதியில் 'அந்நியப் பொருள்கள்' - அதுவே கிருமிப்பரவலுக்குக் காரணம்! வடகொரியா

(கோப்புப் படம்: AP Photo/Ahn Young-joon)

தென்கொரியாவுடனான எல்லைப்பகுதியில் இருந்த 'அந்நியப் பொருள்களே' வடகொரியாவில் ஏற்பட்டுள்ள கிருமிப்பரவலுக்குக் காரணம் என்று வடகொரியா கூறியுள்ளது. 

'அந்நியப் பொருள்களைத்' தொட்டவுடன் மக்களுக்குக் கொரோனா கிருமி தொற்றியதாகப் புலன்விசாரணையில் தெரியவந்துள்ளதாக அது சொன்னது.

இருகொரியாக்களுக்கும் இடையிலான எல்லைப்பகுதியில் காற்று வழியாகவும் பலூன்கள் வழியாகவும் வரும் 'அந்நியப் பொருள்களை' உடனடியாகக் கையாளும்படி ராணுவ வீரர்களிடம் உத்தரவிடப்பட்டுள்ளதாக வடகொரியா கூறியது.

வடகொரியாவிலிருந்து தப்பியவர்களும் தென்கொரியாவில் உள்ள ஆர்வலர்களும் பொதுவாகப் பலூன்களைக் கொண்டு எல்லைதாண்டிப் பிரசுரங்களையும் மனிதாபிமான உதவியையும் அனுப்புவதுண்டு.

வடகொரியா தற்போது முதல்முறையாகக் கிருமிப்பரவலைக் கையாள்கிறது.

ஏப்ரல் மாதத்திலிருந்து அங்கு 4.74 மில்லியன் பேர் காய்ச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

-Reuters

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்