Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியாவின் உத்தரகாண்டில் இளம்பெண் கொலை - நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்

வாசிப்புநேரம் -

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டதன் தொடர்பில் நீதி கேட்டு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. 

சமபவம் குறித்துப் பாரபட்சமற்ற வகையில் தீவிர விசாரணை நடத்தப்படவேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரினர். 

அந்தப் பெண், மாநிலத்தின் முன்னைய அமைச்சர் ஒருவரின் மகன் நிர்வகிக்கும் உல்லாச விடுதியில் பணியாற்றிவந்ததாக அதிகாரிகள் கூறினர். 

அங்கிடா பண்டாரி என்ற அந்த 19 வயதுப் பெண்ணின் சடலம் ரிஷிகேஷ் நகரில் கங்கை நதியை ஒட்டிய பாலம் ஒன்றுக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்டது. 

பண்டாரி கொலை செய்யப்பட்டு, அவரது சடலம் அங்கு வீசப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. 

பாரதிய ஜனதா கட்சியின்  உத்தரகாண்ட் மாநில அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர் வினோத் ஆர்யாவின் மகன் புல்கிட் ஆர்யாவும், உல்லாச விடுதியின் நிர்வாகி, துணை நிர்வாகி ஆகியோரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அதைத் தொடர்ந்து வினோத் ஆர்யாவைக் கட்சியிலிருந்து நீக்கியிருப்பதாய் மாநிலக் கட்சி அலுவலகம் சொன்னது. 

இந்நிலையில் முழுப் பிரேதப் பரிசோதனை செய்து விசாரணை முடியும்வரை பெண்ணின் இறுதிச் சடங்கை நடத்தப்போவதில்லை என்று பெண்ணின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். 

உள்ளூர்வாசிகள் அவர்களுக்கு ஆதரவாக உள்ளனர். 

அவர்களை அமைதிப்படுத்தக் காவல்துறையினர் முயன்று வருகின்றனர்.
 

ஆதாரம் : Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்