Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

வேலையை முடித்தால்தான் வெளியாக முடியும் என்கிறது ஜப்பானில் உள்ள இந்தக் காப்பிக் கடை

வாசிப்புநேரம் -

நாளை செய்யலாம்... பிறகு செய்யலாம் எனக் காலத்தைக் கடத்துவோருக்காகவே ஜப்பானியத் தலைநகர் தோக்கியோவில் ஒரு புதிய காப்பிக் கடை திறக்கப்பட்டுள்ளது...

வாடிக்கையாளர்கள் தங்களது வேலையை முடிக்கும் வரை அல்லது கடை மூடும் நேரம் வரை கடையைவிட்டு வெளியேற முடியாது.

Manuscript Writing Café என்ற அந்தக் கடையில் எழுதுவது தொடர்பான வேலைகள் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.

கடையினுள் நுழைவதற்கு முன்னர் அவர்கள் அன்றைக்கான குறிக்கோள்களை எழுதிக்கொடுக்க வேண்டும்.

ஊக்கம் அளிக்கக் கடை ஊழியர்கள் உள்ளனர்.

வேலையை முடிக்குமாறு 10 நிமிடங்களுக்கு ஒரு முறை நினைவூட்டவும் அவர்கள் தயார்.

முதல் அரை மணி நேரத்திற்கு ஒரு வெள்ளி 62 காசும், அடுத்தடுத்த ஒரு மணி நேரத்திற்கு 3 வெள்ளி 24 காசும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

வேலையை முடிக்க நீண்ட நேரமானால், கட்டணமும் நீண்டுகொண்டே போகும்...

அதனால் விறுவிறுவென வேலையை முடிக்க அந்தக் கடை உதவுவதாகக் கூறப்படுகிறது.

-Today

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்