Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

அமைச்சரவையைத் தெரிவுசெய்யக் கருத்துகளைத் திரட்டும் மலேசியப் பிரதமர்...

வாசிப்புநேரம் -

மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம் (Anwar Ibrahim), அவரது அமைச்சரவை உறுப்பினர்களைத் தெரிவுசெய்யும் முன்னர், அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் கேட்டறிய விரும்புவதாகக் கூறியிருக்கிறார்.

அமைச்சரவைப் பட்டியல் உறுதிசெய்யப்பட்டுவிட்டதா என்று பக்கத்தான் ஹராப்பான் தலைவர் மன்றக் கூட்டத்திற்குப் பிறகு திரு. அன்வாரிடம் நிருபர்கள் வினவினர்.

கூடிய விரைவில் அது வெளியிடப்படும் என்றார் அவர்.

பல கட்சிகளை உள்ளடக்கிய ஒற்றுமை அரசாங்கம் என்பது வழக்கத்துக்கு மாறானது.

ஆகையால் முடிவெடுப்பதற்கு முன்னர் எல்லாக் கருத்துகளையும் கேட்டறியப்போவதாக அவர் சொன்னார்.

இந்நிலையில், திரு. அன்வார் அதிகாரத்துவ வாகனமாக வழங்கப்பட்ட Mercedes S600 ரகக் காரைப் பயன்படுத்தப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

அரசாங்க நிதியை விரயமாக்குவதற்கு எதிராகவும் அவர் எச்சரித்தார்.

மாறாக, பிரதமர் அலுவலகத் துறையில் இருக்கும் ஏதாவது ஒரு வாகனத்தைத் தமது பணிகளுக்காகப் பயன்படுத்தப் போவதாய்த் திரு. அன்வார் சொன்னார்.

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்