Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியா: இஸ்தானா நெகரா சென்றுசேர்ந்தார் திரு அன்வார்

வாசிப்புநேரம் -

மலேசியப் பொதுத்தேர்தல் முடிந்து 5 நாள்கள் கடந்திருக்கும் வேளையில் இன்று நாட்டின் பிரதமர் யார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் தலைவர் திரு அன்வார் இப்ராஹிம் மலேசியாவின் 10ஆவது பிரதமராக நியமிக்கப்படவிருக்கிறார். 

இன்று (24 நவம்பர்) மாலை 5 மணிக்கு 75 வயது திரு. அன்வார் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் அவர் இஸ்தானா நெகாரா சென்றடைந்துவிட்டார் என்று தகவல்கள் கூறுகின்றன. 

அவரது வருகைக்காகச் செய்தியாளர் கூட்டம் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தது. அங்கு செல்ல ஆதரவாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa