Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மீண்டும் சரிந்த ஆசியப் பங்குச் சந்தைகள்

வாசிப்புநேரம் -
மீண்டும் சரிந்த ஆசியப் பங்குச் சந்தைகள்

(படம்: AP Photo/Ahn Young-joon)

ஆசியப் பங்குச் சந்தைகள் இன்று மீண்டும் சரிவைச் சந்தித்தன. 

அமெரிக்க மத்திய வங்கி நேற்றுமுன்தினம் (21 செப்டம்பர்) வட்டி விகிதத்தை முக்கால் புள்ளி உயர்த்தியதைத் தொடர்ந்து Wall Street-டும் ஆசியச் சந்தைகளும் சரிந்தன. 

இன்று ஆசியப் பங்குகள் தொடர்ந்து இறக்கம் கண்டன.

பணவீக்கத்தையும் விலைவாசி உயர்வையும் எதிர்த்துப் போராட உலக வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்துவதால் குறைப்பதால் பொருளியல் மந்தநிலை ஏற்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது. 

அதனை ஒட்டிப் பங்குகள் வேகமாக விற்கப்படுகின்றன.

அமெரிக்க மத்திய வங்கி நேற்று முன்தினம் கடன் பெறுவதற்கான வட்டி விகிதத்தை மூன்றாவது முறையாக உயர்த்தியது. அது தொடர்ந்து உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பிரிட்டன், ஸ்வீடன், நார்வே, சுவிட்சர்லந்து, பிலிப்பீன்ஸ், இந்தோனேசியா ஆகிய நாடுகளின் மத்திய வங்கிகளும் அமெரிக்கப் பாதையில் சென்று வட்டி விகிதத்தை உயர்த்தின.

சிங்கப்பூர், ஹாங்காங், ஷங்ஹாய், சிட்னி உள்ளிட்ட இடங்களில் பங்குச் சந்தை இறங்குமுகமாக இருந்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa