Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

அணுகுண்டு உருவாக்கம், பயன்பாடு ஆகியவற்றைத் தடைசெய்யும் உடன்படிக்கையை ஆதரிக்கும்படி ஜப்பானிய அரசாங்கத்திடம் கோரிக்கை

வாசிப்புநேரம் -

அணுகுண்டு உருவாக்கத்தையும் பயன்பாட்டையும் தடைசெய்யும் உடன்படிக்கை ஒன்றை ஆதரிக்குமாறு ஜப்பானிய அரசாங்கம்  மீண்டும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

அணுகுண்டுத் தாக்குதலில் இருந்து தப்பித்த சிலர், அணுவாயுதத் தடை குறித்த ஐக்கிய நாட்டு நிறுவன ஒப்பந்தத்தின் ஆண்டுநிறைவு நிகழ்ச்சியின்போது அந்த உடன்படிக்கையில் சேருமாறு ஜப்பானிய அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டனர்.  

தாங்கள் அனுபவித்த துன்பங்களை மற்ற எவரும் அனுபவிக்காமல் இருப்பதற்கு ஜப்பான் அந்த ஒப்பந்தத்தில் சேருவதே  மிகப்பெரிய முன்னேற்றப்படி என்று அவர்கள் குறிப்பிட்டனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்