Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மியன்மாரின் ஆங் சான் சூச்சி மீது மேலும் 5 ஊழல் குற்றச்சாட்டுகள்

வாசிப்புநேரம் -
மியன்மாரின் ஆங் சான் சூச்சி மீது மேலும் 5 ஊழல் குற்றச்சாட்டுகள்

(படம்: AFP/File/STR)

மியன்மாரின் முன்னாள் அரசாங்க ஆலோசகர் ஆங் சான் சூச்சியும்  (Aung San Suu Kyi) பதவியிலிருந்து அகற்றப்பட்ட அதிபர் வின் மின்ட்டும் (U Win Myint) மேலும் 5 ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளனர். 

அவை, அவர்கள் பொறுப்பிலிருந்தபோது ஒரு ஹெலிகாப்டரை வாடகைக்கு அமர்த்தியதன் தொடர்பிலானவை என்று சொல்லப்படுகிறது. ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் அதிகபட்சம் 15 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். 

ஏற்கனவே பத்துக்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளின் தொடர்பில் திருவாட்டி சூச்சி விசாரிக்கப்படுகிறார். 

இதுவரை அவருக்கு 6 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

ராணுவம் வழிநடத்தும் நீதிமன்றம் இம்மாதம் 10 ஆம் தேதி திருவாட்டி சூச்சியின் சிறைத் தண்டனையை நாலாண்டு நீட்டித்தது.

கிருமிப்பரவல் கட்டுப்பாடுகளை மீறியது, உரிமம் இல்லாமல் தொலைத்தொடர்புச் சாதனங்கள் வைத்திருந்தது ஆகியவற்றுக்காக அந்தத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், திருவாட்டி சூச்சி எல்லாக் குற்றச்சாட்டுகளையும் மறுத்துவருகிறார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa