Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பேங்காக்கில் மோசமாகிவரும் தூசுமூட்டம்...

வாசிப்புநேரம் -

தாய்லந்து அதிகாரிகள் வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு குடியிருப்பாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர். 

தலைநகர் பேங்காக்கில் (Bangkok) தூசுமூட்டம் மோசமாகி வருவதே அதற்குக் காரணம்.

வெளியிடங்களிலும் முகக்கவசம் அணியுமாறும் மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

பயணம் மேற்கொள்ளும்போது
பொதுப்போக்குவரத்தைப்  பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.   

கடந்த வார இறுதியிலிருந்து பேங்காக்கின் காற்றுத் தூய்மை சுகாதாரமற்ற அளவில் இருப்பதாகக் கூறப்படுகிறது. 

காற்றின் தூய்மை இவ்வார இறுதியில் பாதுகாப்பான அளவைக் கடந்து மோசமான கட்டத்தை எட்டக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். 

காற்றில் சேரும் மாசுத் துகள்களுக்குக் காரணமான நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படும் என்றும் அவர்கள் உறுதியளித்தனர்.


 

ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்