பங்களாதேஷில் பேருந்து விபத்து - 19 பேர் மரணம், 25 பேர் காயம்

(படம்: AFP)
பங்களாதேஷில் பேருந்து ஒன்று இன்று (19 மார்ச்) விபத்துக்குள்ளானதில் 17 பேர் மாண்டனர். 25 பேர் காயமடைந்தனர்.
பேருந்து விரைவுச்சாலையில் உள்ள வேலியின் மீது மோதி சுமார் 10 மீட்டர் ஆழங்கொண்ட பள்ளத்தாக்கில் விழுந்ததாக அந்நாட்டுக் காவல்துறை தெரிவித்தது.
பேருந்து ஓட்டுநர் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததாகக் காவல்துறைச் சந்தேகிக்கிறது.
விபத்தில் காயப்பட்டவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை அதிகாரி கூறினார்.
-AFP