பங்களாதேஷில் வெள்ளத்தில் சிக்கியிருக்கும் 4.5 மில்லியன் பேருக்கு உதவ விரையும் மீட்புப்படை

Mamun Hossain / AFP
பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கியிருக்கும் நாலரை மில்லியன் பேருக்கு நிவாரண உதவி வழங்க, தேடல் மீட்புப்படையினர் முயற்சியில் இறங்கியிருக்கின்றனர்.
நாட்டின் கால்வாசிப் பகுதிகளில் கனத்த மழை பெய்கிறது.
பங்களாதேஷில் 30க்கும் மேற்பட்டோர் மாண்டனர்.
பலர் குடிநீர், உணவு ஆகியவை இல்லாமல் தவிக்கின்றனர்.
சிக்கித்தவிக்கும் குடியிருப்பாளர்களுக்கு உதவ, பங்களாதேஷ் ராணுவம் படகுகளையும் ஹெலிகாப்டர்களையும் பயன்படுத்துகிறது.
பாதிக்கப்பட்ட இடங்களுக்கு 300க்கும் மேற்பட்ட மருத்துவக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இந்நிலையில், பங்களாதேஷில் நீர் மூலம் பரவும் நோய்களால் 3,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்காலிகத் தங்குமிடங்களில் கூட்ட நெரிசல் அதிகரித்துள்ளது.