Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசிய மாமன்னர் விதித்த காலக்கெடு நெருங்குகிறது...தேசிய முன்னணியின் உச்சமன்றம் கூடியது...

வாசிப்புநேரம் -

மலேசிய அரசியல் தலைவர்கள் தங்களது கூட்டணிகளையும் பிரதமர் வேட்பாளரையும் முடிவுசெய்வதற்குரிய காலக்கெடு நெருங்கிக்கொண்டிருக்கிறது.

அவர்கள் இன்று (22 நவம்பர்) பிற்பகல் 2 மணிக்குள் முடிவுசெய்யவேண்டும்.

மலேசிய மாமன்னர் சுல்தான் அப்துல்லா அந்த காலக்கெடுவை நேற்று (21 நவம்பர்) நீட்டித்திருந்தார்.

இன்று காலையில் தேசிய முன்னணியின் உச்சமன்றம், 30 பேர் கொண்ட உறுப்பினர்களுடன் சந்திப்பு ஒன்றை நடத்தியது.

அடுத்த அரசாங்கத்தை அமைப்பதில் எந்தக் கூட்டணிக்கு ஆதரவளிக்கலாம் என்பது பற்றிக் கலந்துபேசப்பட்டதாக் கூறப்படுகிறது.

மலேசியாவில் நடந்துமுடிந்த பொதுத் தேர்தலில், பக்கத்தான் ஹராப்பான், பெரிக்கத்தான் நேசனல் ஆகிய கூட்டணிகள் ஆக அதிகமான நாடாளுமன்ற இடங்களைக் கைப்பற்றின.

அவ்விரு கூட்டணிகளின் தலைவர்களும், அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்குப் போதுமான ஆதரவைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

மலேசிய இஸ்லாமியக் கட்சியான PASஇன் தலைவர் அப்துல் ஹாடி அவாங், சமூக நல்லிணக்கத்தைப் பாதிக்கும் சினமூட்டும் நடவடிக்கைகளைத் தவிர்க்கும்படி கேட்டுக்கொண்டார்.

பக்கத்தான் ஹராப்பான்  கூட்டணித் தலைவர் அன்வார் இப்ராஹிம் அத்தகைய கருத்தை நேற்று வெளியிட்டார்.

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்