Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு சாலைப் போக்குவரத்து, தூய்மைக் கேடு ஆகியவற்றைக் குறைக்க முனையும் பெய்ச்சிங்

வாசிப்புநேரம் -
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு  சாலைப் போக்குவரத்து, தூய்மைக் கேடு ஆகியவற்றைக் குறைக்க முனையும் பெய்ச்சிங்

(படம்:Noel Celis/AFP)

சீனத் தலைநகர் பெய்ச்சிங், எதிர்வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு, அதன் சாலைப் போக்குவரத்தைக் குறைத்துக்கொள்ள முனைகிறது. 

அதோடு, காற்றுத் தூய்மைக் கேட்டையும் குறைத்துக்கொள்ள முயன்று வருவதாக பெய்ச்சிங் அறிவித்தது. 

கட்டுமானக் கழிவுகள், மணல், கற்கள், சரளைக்கல் போன்றவற்றைச் சுமந்து செல்லும் கனரக வாகனங்களை பெய்ச்சிங் சுமார் இரண்டு மாதங்களுக்குச் சாலையில் செல்வதற்குத் தடை விதிக்கவுள்ளது. 

அத்தகைய கட்டுப்பாடுகள், அடுத்த வார இறுதியிலிருந்து (21 ஜனவரி) 55 நாள்களுக்கு நடப்பில் இருக்கும். 

பெய்ச்சிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் அடுத்தமாதம் 4ஆம் தேதி முதல் 20ஆம் தேதிவரை நடைபெறும். 

கிருமித்தொற்றுச் சூழலால், அதைக் காண வெளிநாட்டவருக்கு அனுமதி இல்லை. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa