குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்குமுன் கிருமித்தொற்றுக் கட்டுப்பாடுகளை முடுக்கிவிடும் பெய்ச்சிங்

AFP
சீனத் தலைநகர் பெய்ச்சிங்கில் (Beijing) குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக அங்கு கிருமித்தொற்றுக் கட்டுப்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
அங்கு உள்ளூர் அளவில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கடந்த வாரம் அதிகரித்திருந்ததால் அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
அவசியமற்ற ஒன்றுகூடல்களைத் தவிர்க்கும்படிக் குடியிருப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
உறைய வைக்கப்பட்ட பொருள்களின் கிடங்குகளிலும் சோதனைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இன்று (20 ஜனவரி) பெய்ச்சிங்கில் மூவர் உள்ளூர் அளவில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
உலக அளவில் பாதிக்கப்படுவோரைக் காட்டிலும் சீனாவில் பதிவாகும் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
இம்மாதம் 15ஆம் தேதியிலிருந்து ஒவ்வொரு நாளும் 10க்கும் குறைவானோர் கிருமித்தொற்றுக்கு ஆளாகினர்.