Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பெய்ச்சிங் - COVID-19 கட்டுப்பாடுகளை எதிர்த்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

வாசிப்புநேரம் -

பெய்ச்சிங் பல்கலைக்கழகத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கடுமையான COVID-19 கட்டுப்பாடுகளை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். 

கிருமித்தொற்றை முற்றாகத் துடைத்தொழிக்கும்  கொள்கையைச் சீனா பின்பற்றுகிறது. 

கடுமையான கட்டுப்பாடுகளும் முடக்கநிலையும் மக்களை விரக்தியடையச் செய்துள்ளது.

பெய்ச்சிங் நகரின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான பீக்கிங் பல்கலையில் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டன.

உணவு விநியோகம் உள்ளிட்ட முக்கியமான நடமாட்டங்களுக்கும் பல்கலைக்கழகம் தடை விதிக்க முயன்றதாகத் தெரிகிறது. 

அதை அடுத்து 300க்கும் அதிகமான மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக AFP செய்தி நிறுவனம் கூறியது.

பல்கலையின் துணைத் தலைவர் மாணவர்கள் விடுதிகளுக்குத் திரும்பும்படி கேட்டுக்கொண்டார்.

கூட்டம் கலைந்ததும் சில கட்டுப்பாடுகளைத் தளர்த்த அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்.

பீக்கிங் பல்கலையில்தான் 1989ஆம் ஆண்டு தியெனன்மென் சதுக்க ஆர்ப்பாட்டம் தொடங்கியது.

-AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்