Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சென்னையில் நான்கே நிமிடங்களில் பிரியாணியா? அது எப்படி?

வாசிப்புநேரம் -
சென்னையில் BVK Biryani என்னும் நிறுவனம் மக்கள் எளிதில் அதுவும் நான்கே நிமிடங்களில் பிரியாணியை வாங்க ஒரு புதுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

பிரியாணி விநியோகச் சாதனத்தைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் வெவ்வேறு விதமான பிரியாணியை வாங்கலாம் என Hindustan Times குறிப்பிட்டது.

அதற்கு எந்த ஊழியரின் உதவியும் தேவையில்லை.

"இந்த அனுபவம் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது!" என அதனை முதன்முறையாகப் பயன்படுத்திய இணையக் குறிப்பாளர் food of chennai என்னும் அவரது Instagram பக்கத்தில் பகிர்ந்தார்.

இதுவரை ஆயிரக்கணக்கில் இணையவாசிகள் அந்தக் காணொளியைப் பார்வையிட்டுள்ளனர்.

அதற்கு அமோக வரவேற்புக் கிடைத்ததைக் காட்டும் கருத்துகள் Instagramஇல் பதிவாகின.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்