பிரிட்டனிலிருந்து கம்போடியாவுக்குத் திருப்பித் தரப்பட்ட அரசகுல நகைகள்

(படம்: Kok KY / CAMBODIA'S GOVERNMENT CABINET / AFP)
திருடப்பட்ட அங்கோர் அரசகுல நகைகள், பிரிட்டனிலிருந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு கம்போடியாவுக்குத் திருப்பித் தரப்பட்டுள்ளன.
அவற்றைக் கம்போடியத் தலைவர் ஹுன் சென் (Hun Sen) நேற்று (17 மார்ச்) காட்டினார்.

அதில் 9ஆம் நூற்றாண்டிலிருந்து 14ஆம் நூற்றாண்டு வரையிலான தங்கக் கிரீடங்கள், கழுத்தணிகள், தாயத்துகள் முதலியவை இருந்தன.
காணாமற்போன மற்ற நகைகளையும் கம்போடியாவுக்குத் திருப்பித்தருமாறு அந்நாட்டின் தலைவர் கோரினார்.

அரும்பொருளகத்தில் காட்சியில் வைக்கப்படவிருக்கும் அந்த நகைகள் விலைமதிப்பற்ற கலாசார மரபுடைமையின் அடையாளம் என்று அந்நாட்டின் கலாசார அமைச்சு கூறியது.
-AFP