Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மியன்மார் சென்ற கம்போடியப் பிரதமரின் பயணம் நிறைவுபெறுகிறது - அமைதி திரும்புமா ?

மியன்மார் சென்ற கம்போடியப் பிரதமரின் பயணம் நிறைவுபெறுகிறது - அமைதி திரும்புமா ?

வாசிப்புநேரம் -
மியன்மார் சென்ற கம்போடியப் பிரதமரின் பயணம் நிறைவுபெறுகிறது - அமைதி திரும்புமா ?

(கோப்புப் படம்: AFP)

கம்போடியப் பிரதமர் ஹுன் சென் (Hun Sen) மியன்மாருக்கு மேற்கொண்டுள்ள இரண்டு நாள் பயணம் இன்று நிறைவடைகிறது.

ஆசியான் நாடுகளுக்குத் தற்போது தலைமை வகிக்கும் அவர், மியன்மார் ராணுவத் தலைவர் மின் ஓங் லைனைச்(Min Ong Line) சந்தித்தார்.

கடந்த ஆண்டு நடந்த ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு மியன்மார் சென்றிருக்கும் முதல் வெளிநாட்டுத் தலைவர் திரு. ஹுன் சென்.

மியன்மாரில் மீண்டும் அமைதி திரும்ப பணியாற்றிவருவதாக ராணுவத் தலைவர் மின் ஓங் லைன் கூறினார்.

ஆசியானுக்கு ஆதரவு வழங்க அவர் ஒப்புக்கொண்டதாக ஜப்பானின் NHK செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

ராணுவத்திற்கும், ஜனநாயக ஆதரவுப் படையினருக்கும் இடையே சமரசப் பேச்சு நடத்த நியமிக்கப்படும் ஆசியான் சிறப்புத் தூதருக்கு, உதவத் தயார் என்று நேற்று வெளியிட்ட கூட்டறிக்கையில் அவர் தெரிவித்தார்.

சிறுபான்மை இனப் போராளிகளுடன் செய்துகொண்டுள்ள போர் நிறுத்தம், இந்த ஆண்டு இறுதிவரை தொடரும் என்றும் திரு. மின் உத்தரவாதம் அளித்தார்.

மியன்மார் கிருமிப்பரவலை எதிர்த்துப் போராட கம்போடியா மருத்துவ உதவிகள் வழங்கியுள்ளது.

இரு தலைவர்களும் இருதரப்பு உறவு, ஒத்துழைப்பு, வட்டார, ஆசியான் பிரச்சினைகள் பற்றியும் கலந்துரையாடினர்.

இம்மாதம் 18ஆம் தேதி ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பை கம்போடியா ஏற்று நடத்தவுள்ளது.

அது சியேம் ரிப் (Siem Reap) நகரில் நடைபெறும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்