கம்போடியாவில் தவறி விழுந்த ஆடவரைக் கடித்துக் குதறிக் கொன்ற 40 முதலைகள்
வாசிப்புநேரம் -

(படம்: AFP)
கம்போடியாவின் முதலைப் பண்ணையில் அவை வசிக்குமிடத்தினுள் தவறி விழுந்த ஆடவரைச் சுமார் 40 முதலைகள் கொன்றன.
லுவான் நாம் என்ற அந்த 72 வயது ஆடவரின் குடும்பம் அந்தப் பண்ணையை நிர்வகித்துவந்தது.
முட்டையிட்ட ஒரு முதலையை அதன் கூண்டிலிருந்து நகர்த்த முயன்றார் லுவான்.
அதற்காக அவர் குச்சியை நீட்ட, அதை இறுகப் பிடித்துக்கொண்ட முதலை, அவரை உள்ளே இழுத்தது.
உடனே அங்கிருந்த முதலைக் கூட்டம் அவர் மீது பாய்ந்து அவரைக் குதறிக் கொன்றது.
கடுமையாகக் கடிபட்ட அவரது உடல் மீட்கப்பட்டது.
உள்ளூரில் உள்ள முதலைப் பண்ணை அமைப்புகளின் தலைவர் லுவான்.
முதலைப் பண்ணைத் தொழிலில் ஈடுபடவேண்டாம் என்றும் அவற்றை வளர்க்கவேண்டாம் என்றும் பல நாள்களாக அவரது குடும்பத்தினர் வேண்டினர்.
அதே கிராமத்தில் 2019ஆம் ஆண்டு 2 வயதுச் சிறுமி ஒருத்தி அவளது குடும்பம் நிர்வகித்த பண்ணையில் தவறி விழுந்தபோது முதலைகள் அவளைக் கொன்று விழுங்கின.
சியாம் ரிப்பில் நிறைய முதலைப் பண்ணைகள் உள்ளன.
முட்டை, தோல், இறைச்சி ஆகியவற்றுக்காக அவை வளர்க்கப்படுகின்றன.