Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

TikTok செயலி மீதான கட்டுப்பாடுகள்: நியாயமாக நடந்துகொள்ளுமாறு உலக நாடுகளை வலியுறுத்திய சீனா

வாசிப்புநேரம் -
TikTok செயலி பல நாடுகளில் கட்டுப்படுத்தப்படுவதைத் தொடர்ந்து தனது நிறுவனங்களை நியாயமாக நடத்தும்படி சீனா உலக நாடுகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறது.

பாதுகாப்புக் காரணங்காட்டி நியூசிலந்து TikTok செயலிக்குக் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது.

நியூசிலந்தின் நாடாளுமன்றக் கட்டமைப்புகளில் இம்மாத இறுதிக்குள் TikTok தடுக்கப்படும்.

அது நியாயமற்றச் செயல் என்று சீனா குறைகூறியது.

தேசியப் பாதுகாப்பு என்ற பெயரில் நியாயமில்லாமல் நடக்கவேண்டாம் என்று உலக நாடுகளுக்குச் சீனா வேண்டுகோள் விடுத்தது.

நியூசிலந்துக்கு முன்பு, பிரிட்டன், அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளும் TikTok செயலிக்குக் கட்டுப்பாடு விதித்தன.

சீனா அந்தச் செயலியை வைத்துத் தனிப்பட்ட தகவல்களைச் சேகரித்து மற்ற நாடுகளின் உள்விவகாரத்தில் தலையிடக்கூடும் என்று பல நாடுகள் அஞ்சுகின்றன.

இந்தியா 2020-ஆம் TikTok உள்ளிட்ட சீனாவின் பல செயலிகளுக்குத் தடைவிதித்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்