சீனாவில் தளர்த்தப்படும் COVID-19 கட்டுப்பாடுகள் - பயணம் செய்ய ஆர்வமாய் இருக்கும் மக்கள்

படம்: Noel Celis / AFP
சீனா COVID-19 கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதில் மற்றொரு படியை எடுத்துள்ளது.
ஒருவர் கொரோனா கிருமித்தொற்றுச் சம்பவங்கள் ஏற்பட்ட பகுதிகளுக்குச் சென்றிருந்தால் மின்னிலக்க ஆவணங்களில் அந்த விவரம் இனி இருக்காது.
புதிய மாற்றத்தால் இன்னமும் நோய்த்தொற்று ஏற்படும் வட்டாரங்களில் வசிப்போர் இனி தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லாமல் வேறு நகரங்களுக்குப் பயணம் செய்யலாம்.
அந்தத் தகவல் இணையத்தில் ஆக அதிகமாகத் தேடப்படும் தலைப்பானது.
சில மணிநேரத்தில் சுமார் 300 மில்லியன் முறை அது பார்க்கப்பட்டது.
பயண விசாரிப்புகளும் வெகுவாக அதிகரித்தன.
அறிவிப்பு வந்த அரை மணிநேரத்தில் விமானப் பயணச் சீட்டுகளுக்கான தேடல் 60 விழுக்காடும் ஹோட்டல் அறைகளுக்கான தேடல் 100 விழுக்காடும் கூடியதாகப் பயணச்சீட்டுப் பதிவுத் தளமொன்று தெரிவித்தது.
ஷங்ஹாயில் மீண்டும் உணவகங்களில் அமர்ந்து உணவருந்த அனுமதிக்கப்படுகிறது.
மார்ச் இறுதியிலிருந்து அதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு மதிப்பீட்டில் தேறிய பிறகே உணவகங்கள் அந்தச் சேவையை வழங்கமுடியும்.
கடந்த ஒரு வாரத்தில் சமூக அளவில் நோய்ப்பரவல் இல்லாத வட்டாரங்கள் மட்டுமே அவ்வாறு செய்யலாம்.