Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீனாவில் கிருமிப்பரவல் சூழலில் ஊருக்குத் திரும்புவோரிடம் அதிகாரிகள் இரக்கத்துடன் நடந்துகொள்ள ஊடகங்கள் கோரிக்கை

வாசிப்புநேரம் -

சீனாவில் அரசாங்கம் மக்கள் மீது கடுமையாக நடந்துகொள்ளவேண்டாம் எனச் சில ஊடக நிறுவனங்கள் கேட்டுக்கொண்டுள்ளன. 

"ஆலோசனையைப் புறக்கணித்து, கெட்ட எண்ணம் கொண்ட சிலர், சொந்த ஊருக்குத் திரும்பினால், அவர்களைத் தனிமைப்படுத்தித் தடுப்புக்காவலில் வைப்போம்" என ஹெனான் (Henan) மாநில அரசாங்க அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார். 

அதைத் தொடர்ந்து மக்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவேண்டாம் எனச் சில ஊடகங்கள் கேட்டுக்கொண்டன. 

பண்டிகைக் காலத்தில் சொந்த ஊருக்குத் திரும்ப நினைப்பது மனித இயல்பு என  People's Daily செய்தித்தாள் சுட்டியது. அதனைக் கெட்ட எண்ணமாகக் கருதுவது ஏன் என்று அது கேள்வி எழுப்பியது. 

இதற்கிடையே, சீனாவில் 24 மணி நேர இடைவெளியில் மேலும் 63 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

புதிதாய்க் கிருமித்தொற்று ஏற்பட்ட 63 பேரில் 23 பேருக்கு உள்ளூர் அளவில் கிருமி தொற்றியது. 

மற்ற 40 பேர், வெளிநடுகளிலிருந்து சீனாவுக்குச் சென்றவர்கள்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்