Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

வெளிநாடுகளுக்குச் செல்ல விரையும் சீன மக்கள்

வாசிப்புநேரம் -

சீனாவில் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து சீனக் குடியிருப்பாளர்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல விரைகின்றனர். 

சீனாவிலிருந்து வெளிநாட்டுக்குச் செல்லும் பயணங்களுக்கான முன்பதிவுகள் அதிகரித்துள்ளன.

அறிவிப்பு வந்தவுடன் 30 நிமிடங்களில் Trip.com எனும் பயண இணையத்தளத்தில் பிரபலச் சுற்றுலாத் தலங்களுக்கான இணையத் தேடல்கள் 10 மடங்கு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

பயண முகவர் தளமான Qunarஇல் விமானச் சேவைகளுக்கான கோரிக்கைகள் 7 மடங்கு அதிகரித்துள்ளன.

வெளிநாட்டுக்குச் செல்ல விரும்பும் சீனர்களுக்கான விசா அனுமதியும் மீண்டும் வழங்கப்படுகிறது.

ஆனால் வெளிநாட்டினருக்கு விசா வழங்கும் திட்டத்தைச் சீனா இன்னும் தொடங்கவில்லை. 

வெளிநாட்டிலிருந்து வருவோர் 5 நாள் கட்டாயம் தனிமைப்படுத்தப்படவேண்டும் எனும் விதிமுறையைத் தளர்த்துவதாகச் சீனா இந்த வாரத் தொடக்கத்தில் அறிவித்திருந்தது.

ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்