சீன நகரம் ஒன்றில் 10 மில்லியன் பேருக்கு COVID-19 பரிசோதனை

(படம்: AFP/STR)
சீனாவின் வடகிழக்கு நகரமான ஹார்பினில் (Harbin) வசிக்கும் அனைவருக்கும் கிருமித்தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
நாளை மறுநாள் (24 ஜனவரி) அந்த நகரில் வசிக்கும் சுமார் 10 மில்லியன் பேருக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
சீனாவின் பல நகரங்களில் ஓமக்ரான் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி வருவதாக ஹார்பின் அரசாங்கம் சுட்டியது.
சீனப்புத்தாண்டுக்கு முன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பரிசோதனைகளை நடத்துவதன் மூலம் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தலாம் என்று அது நம்புகிறது.