Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஊழல், சட்டவிரோத நடவடிக்கைகள்... சீன முன்னாள் நீதித்துறை அமைச்சருக்கு மரணதண்டனை

வாசிப்புநேரம் -
ஊழல், சட்டவிரோத நடவடிக்கைகள்... சீன முன்னாள் நீதித்துறை அமைச்சருக்கு மரணதண்டனை

(கோப்புப் படம்: CNA)

சீனா முன்னாள் நீதித்துறை அமைச்சர் 
ஃபூ ஸெங்ஹுவாவுக்கு (Fu Zhenghua) ஈராண்டு விலக்களித்து மரணதண்டனை விதித்துள்ளது.  

ஊழல் செய்ததாகவும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களை மறைக்க உதவியதாகவும் ஃபூ ஸெங்ஹுவாமீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. 

சீனாவில் ஊழலை ஒழிக்க அதிபர் சி சின்பிங் (Xi Jinping) தீவிர முயற்சி மேற்கொண்டிருக்கிறார். பத்தாண்டுக்கு முன்னர் அவர் பொறுப்பேற்றபோதே அதற்கான இயக்கம் சூடுபிடித்தது. 

அமைச்சராக இருந்தபோதும் 2005 இலிருந்து சென்ற ஆண்டு வரை காவல்துறைத் தலைவராக இருந்தபோதும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதை ஃபூ ஸெங்ஹுவா ஒப்புக்கொண்டார். 

பதவிக்காலத்தின்போது தம்முடைய சகோதரரும் மற்றவர்களும் செய்த குற்றங்களை மறைக்க 
ஃபூ ஸெங்ஹுவா உதவினார். 

அதற்காகப் பணமும் சுமார் பதினாறரை மில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்தும் அவர் லஞ்சமாகப் பெற்றுள்ளார். 

ஃபூ ஸெங்ஹுவாவின் சகோதரர் செய்த குற்றங்கள் என்ன என்பது பற்றிச் சீன ஊடகங்கள் எதுவும் குறிப்பிடவில்லை.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa