Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீனாவில் கடுமையான வானிலை... அவதியுறும் மக்கள்

வாசிப்புநேரம் -

சீனாவில் கடுமையான வானிலையால் மக்கள் அவதியுறுதிகின்றனர்.

நாட்டின் வடக்குப் பகுதியில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டிவிட்டது.

முன்னெப்போதும் இல்லாத வகையில் சுட்டெரிக்கும் வெப்பத்தால் பல மாநிலங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

குளிர்பதனச் சேவைகளுக்கான தேவை அதிகரித்துள்ளதால் எரிசக்திப் பயன்பாடு கூடியிருக்கிறது.

மின்தடையைத் தவிர்ப்பதற்குச் சீனா அதன் நிலக்கரி உற்பத்தியை முடுக்கிவிடவேண்டும் என்று சீனப் பிரதமர் லீ கெச்சியாங் (Li Keqiang) கூறினார்.

இதற்கிடையே சீனாவில் வெள்ளமும் ஏற்பட்டுள்ளது.

பல ஆண்டுகளில் கண்டிராத அளவு அங்கு நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

கனத்த மழையால் 100க்கும் மேற்பட்ட ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டது.

குவாங்டோங் மாநிலத்தில் சுமார் ஈராயிரம் வீடுகள் சேதமடைந்தன.

பல சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டு, நீர்மட்டம் கார்களுக்கு மேலே உள்ளதாகக் கூறப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்